வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு
ஆண்டிபட்டி:மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டது.மதுரை சித்திரை திருவிழாவுக்காக மே 12 ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 54.95 அடி (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.