மேலும் செய்திகள்
58ம் கால்வாய் வழியாக நீர் திறப்பு
30-Oct-2025
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக செல்லும் நீரால் கால்வாய் செல்லும் வழியோர கிராமங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 58 கிராமங்கள் பயன் பெறும் வகையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் கொண்டு செல்ல கால்வாய் வசதி உள்ளது. அக்.29ல் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து குரியம்மாள்புரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், அய்யர் கோட்டம், வண்ணாத்திப்பாறை, டி.புதூர், அணைக்கரைப்பட்டி உட்பட பல கிராமங்களை கடந்து கால்வாய் நீர் செல்கிறது. கால்வாய் நீரால் வழியோர விவசாயக் கிணறுகள், போர்களில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. இரவை பாசனத்தில் தண்ணீர் தேவை பூர்த்தியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30-Oct-2025