விபத்து அபாயத்தில் குடிநீர் தொட்டி படிக்கட்டுகள்
தேனி : தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஹைஸ்கூல் தெருவில் இரு மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றில் ஒரு தொட்டி சுமார் 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இந்த தொட்டியின் படிக்கட்டுகள் தற்போது முழுவதும் சேதமடைந்து உள்ளது. சில மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி என நீர்தேக்க தொட்டிக்கு வர்ணம் பூசி அருகே இரும்பு ஏணி அமைத்தனர். சேதமடைந்த படிக்கட்டுகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வில்லை. யாரேனும் உள்ளே சென்று படிக்கட்டுகளில் ஏறினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இடிந்துள்ள படிக்கட்டுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.