உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை வெயிலுக்கு முன்பாக துவங்கிய தர்பூசணி சீசன்

கோடை வெயிலுக்கு முன்பாக துவங்கிய தர்பூசணி சீசன்

போடி: கோடை வெயில் துவங்குவதற்கு முன்பாகவே தேனி மாவட்டத்தில் தர்பூசணி வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மார்ச், ஏப்ரலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கரும்புச்சாறு, இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் வகைகள் அதிக அளவில் விற்பனையாகிறது. மக்களும் அதிகளவில் வாங்கி பயன்படுத்துவர். கோடை வெயில் துவங்குவதற்கு முன்பாகவே தேனி மாவட்டத்தில் தர்பூசணி பழங்களின் வரத்து வர துவங்கி உள்ளது. தற்போது பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அதனை சமாளிக்க நீர் சத்து மிகுந்த தர்பூசணி பழங்களை மக்கள் வாங்கி செல்வதோடு, ஜூஸ் ஆகவும் பருகி வருகின்றனர்.விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசணி பழங்களை தேனி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை விற்பனை செய்கின்றனர். பழங்களை வாங்கிய வியாபாரிகள் சில்லறையில் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'கோடை வெயில் துவங்குவதற்கு முன் தர்பூசணி வரத்து வர துவங்கி உள்ளது.நீர் சத்து நிறைந்த தர்பூசணியை சில்லறையில் கிலோ ரூ. 25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கிறோம். தற்போது விற்பனை குறைவாக இருந்தாலும் வெயில் காலங்களில் புதிய பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி