மேலும் செய்திகள்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
12 hour(s) ago
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம் பகுதிகளில் நெசவுத்தொழில் அதிகம் உள்ளது. கைத்தறி தொழில் நசிந்து போன நிலையில் தற்போது இப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள் அதிகம் உற்பத்தியாகிறது. காட்டன் ரக சேலைகள் ஆண்டு முழுவதும் உற்பத்தி, விற்பனை இருந்தாலும் பண்டிகை காலங்களில் தேவை அதிகமாகும். இதனை கருத்தில் கொண்டு தைப்பொங்கல் தேவைக்காக கடந்த சில நாட்களாக சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் தற்போது சேலைகளில் டிசைன்களை மாற்றி அமைத்துள்ளனர். பட்டுசேலைக்கு இணையான ரகத்திற்கு வரவேற்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கூறியதாவது: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் தற்போது 60, 80ம் நம்பர் நூல்களில் பல வண்ணங்களில் நைஸ் ரக காட்டன் சேலைகள் உற்பத்தி ஆகிறது. டபுள் வரி யானை மயில், நெழிப்பேடு, ஜாக்கெட் துணியுடன் இணைந்த சேலை, பட்டுச்சேலைக்கு இணையான மெர்சிடெஸ் ரகம் தற்போது மார்க்கெட்டில் அதிகம் தேவைப்படுகிறது. புட்டா, கோர்வை புட்டா, கட்டம் புட்டா, கோர்வை கட்டம் செல்ப் டிசைன் வகை சேலைகளும் உற்பத்தியாகிறது. இப்பகுதியில் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும் சேலைகள் தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆன்லைன் மூலமும் ஆர்டர்கள் பெற்று பலரும் சேலைகள் விற்பனை செய்கின்றனர். 2.5 மீ, 3 மீ., நீளம் கொண்ட சுடிதார் துணிகளும் உற்பத்தி ஆகிறது. சேலைகள் விலை தற்போது ரகத்திற்கு தக்கபடி ரூ.500 முதல் 2000 வரையிலான விலையில் உள்ளன. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்டன் ரக சேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 hour(s) ago