உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழவர் சேவை மையம் அமைக்க வரவேற்பு

உழவர் சேவை மையம் அமைக்க வரவேற்பு

தேனி: தோட்டக்கலைத்துறை மூலம் முதல்வரின் உழவர் சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண், வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை மையங்கள் அமைக்க 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படும். இங்கு விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், இடு பொருட்கள் விற்பனை செய்யலாம். மகசூல் அதிகரிக்க, பூச்சி நோய் மேலாண்மை தொடர்பான ஆலோசனை வழங்கலாம். இந்த மையம் அமைக்க https://tnagrisnet.tn.gov.in/KaviaDP/ registerஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மையம் அமைப்பவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ