உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18ம் கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய நிதி என்னாச்சு சார்... அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

18ம் கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய நிதி என்னாச்சு சார்... அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 47 கி.மீ., தூரமுள்ள 18ம் கால்வாய் திட்டம் 2010ல் துவக்கப்பட்டது. இதன் மூலம் 6840 ஏக்கர் பரப்பளவிலான மானாவாரி விவசாய நிலங்கள் நேரடி பாசன பயன் பெறுகின்றன. இது தவிர கோம்பை புதுக்குளம், தேவாரம் சின்ன தேவி கண்மாய், பெரிய தேவி கண்மாய் உள்ளிட்ட 51 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீராதனமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் லோயர் கேம்ப் தலை மதகுப்பகுதியில் இருந்து கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர்மட்டம் குறைவு காரணத்தை முன் வைத்து இரண்டு மாதம் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும் முன்கூட்டியே கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்காததால் அடிக்கடி கரைப்பகுதிஉடைப்பு ஏற்பட்டுதண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலை மதகுப் பகுதியை ஒட்டி உள்ளபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு மணல் மூளைகள் அடுக்கி தற்காலிகமாக சிரமிக்கப்பட்டது. ஆனால் நிரந்தரமாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லைபல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ள பணங்கள் வாயை தூர்வாரி பராமரிப்பு நிகழ்ச்சி செய்ய அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இது அறிவிப்போடு நின்றுள்ளது. முறையான அரசு உத்தரவு வராததால் அதிகாரிகள் இப்பணிகள் செய்ய முடியாமல்உள்ளனர்.லோயர் கேம்பில் இருந்து போடி வரை உள்ள இக் கால்வாயில் இரு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் கால்வாயில் புதர் மண்டி கிடக்கிறது. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றி கரைப்பகுதியை சீரமைத்த பின்பு தான் தண்ணீர் திறக்க முடியும். இக்கால்வாயில் தண்ணீர் திறக்க இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை சீரமைப்பு பணிக்காக பயன்படுத்த விரைவில்அரசு உத்தரவிடவிவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை