உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

கடமலைக்குண்டு; கடமலைக்குண்டு அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் 32, தனியார் பஸ் டிரைவர், நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பேரையம்பட்டியை சேர்ந்த கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. கடந்த மூன்று மாதமாக கணவன் மனைவிக்குள் பிரச்னை இருந்துள்ளது. ஏப்ரல் 22ல் வேலைக்குச் சென்ற சரவணகுமார், மறுநாள் வேலையை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரவணகுமார் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ