உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

ஆண்டிபட்டி : திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் மூக்கையா 37, கூலி வேலை செய்து வருகிறார். திருப்பூரைச் சேர்ந்த செந்தில்முருகன் மகள் பாண்டி தேவி 33,யை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாண்டி தேவி தனது 4 வயது மகன் ரிஷிக்குமாருடன் ஆண்டிபட்டிக்கு சென்று துணி வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. மகனுடன் மனைவி மாயமானது குறித்து மூக்கையா புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி