குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே டி.அழகாபுரியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 28, டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரவீணா 26, இவர்களுக்கு மோகிதா ஸ்ரீ 4, பிரதிக்ஷா ஸ்ரீ 2, என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக தங்கப்பாண்டியன் பெற்றோர் வீட்டில் வசித்துள்ளனர். இரு நாட்களுக்கு முன் தங்கபாண்டி வேலைக்கு சென்று விட்டார். மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தங்கப்பாண்டியன் பெற்றோர் உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது ரவீணா மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை. இது குறித்து தங்கப்பாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் எங்கு சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவர்கள் ஆட்டோவில் ஏறி சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து தங்கப்பாண்டி கொடுத்த புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.