உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகானல் நீர்வீழ்ச்சியில் காட்டு யானை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பெரியகானல் நீர்வீழ்ச்சியில் காட்டு யானை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு: பெரியகானல் நீர்வீழ்ச்சியின் அருகில் காட்டு யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே பெரியகானல் நீர்வீழ்ச்சி உள்ளது. அதனை நெடுஞ்சாலையில் பயணித்தவாறு ரசிக்கலாம். தென் மேற்கு பருவ மழையின்போது நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதன் பிறகு நீர்வரத்து குறைந்து கோடையில் வறண்டு விடும். தற்போது நீர்வரத்து குறைந்து விடும் என்ற போதும் அக்டோபர் இறுதி வரை மழை பெய்ததால் நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் நீர்வீழ்ச்சியின் அருகே மேல் பகுதியில் நேற்று காலை 9:30 மணிக்கு காட்டு யானை நடமாடியது. அதனை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். குறிப்பாக அப்பகுதிக்கு காட்டு யானைகள் வருவது இல்லை. நேற்று காட்டு யானை நடமாடிய நிலையில் நீர்வரத்துடன் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காணப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி