உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடமலைகுடியில் காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு

இடமலைகுடியில் காட்டு யானைகளால் சேதம் அதிகரிப்பு

மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் பல பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். ஊராட்சியில் பல பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.சொசைட்டிகுடி அருகில் உள்ள புதுக்குடியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள ஒன்பது யானைகளை கொண்ட கூட்டம் பலரது ஏலத் தோட்டங்கள் உள்பட பல்வேறு தோட்டங்களை சேதப்படுத்தின.அதே போல் கேப்பைகாடு பகுதியில் முகாமிட்டுள்ள ஏழு யானைகள், பி.எஸ்.என்.எல். சார்பில் அமைக்கப்பட்டுள்ள டவரில் கேபிள்களை சேதப்படுத்தின. ஏற்கனவே டவர் செயல்படாத நிலையில் தற்போது கேபிள்களை யானைகள் சேதப்படுத்தியதால் தொலை தொடர்பு வசதி ஏற்படுத்த காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில் டவரின் அருகில் உள்ள சோலார் பேனல்களை யானைகள் சேதப்படுத்தாததால் தப்பின. சேதப்படுத்த வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பாக காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்து மலைவாழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை