உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா; ஆறு சுருங்கி கால்வாயாக மாறும் அவலம் தொடர்கிறது

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனுார், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக செல்லும் 47 கி.மீ.. தூரமுள்ள முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையில் கலக்கிறது. ஆற்றின் இரண்டு பக்க கரைகள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் தென்னந்தோப்புகள், மாந்தோப்புகளாக மாறியுள்ளன. ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் கரைப்பகுதி சேதமடைந்து கூடுதல் தண்ணீர் திறக்கும் போது விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சுருங்கி வரும் ஆற்றை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுவும் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை. இதில் நில அளவை, வருவாய்த்துறை, போலீஸ், நீர்வளத்துறை என பல துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணியாக இருப்பதால் இதனை யார் ஒருங்கிணைத்து செய்வது என்பதில் சிக்கல் உள்ளதாக நீர்வளத்துறையினர் புலம்பி வருகின்றனர். இதன் காரணமாகவே நீர்வளத்துறையினரும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும், கால்நடைகளின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதற்கும் முல்லைப் பெரியாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இருபோக நெல் சாகுபடி நிலங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு உள்ளது. ஆற்றின் கரையை ஆக்கிரமிப்பு அகற்றி அகலப்படுத்துவதுடன் கரைப்பகுதியை பராமரிக்க நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 23:43

ManiMurugan Murugan உங்கள் தொகுதி சட்டமன்ற பாராளுமன்ற ஆட்கள் எங்கே சாராய போதைல உள்ளார் களை பிடிஆரை பிடியுங்கள் உங்கள் ஊரில் தலைவர் ரஜினிகாந்த் சொந்த த் கள் இருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா சின்னமனூர் அழகே அழகு அதை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் அங்குள்ள சொந்த த் களை களத்தில் இறங்க வேண்டும் இயற்கையை காப்பாற்ற


ManiMurugan Murugan
ஆக 20, 2025 23:36

உங்கள் பகுதி பஞ்சாயத்து அல்லதுநகராட்சி அலுவலரை அணுகுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை