/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர்களில் பதிவு எண்ணிற்கு பதிலாக பெயர்களுடன் இயக்கம் விதிமீறல் கண்காணிக்கப்படுமா
டூவீலர்களில் பதிவு எண்ணிற்கு பதிலாக பெயர்களுடன் இயக்கம் விதிமீறல் கண்காணிக்கப்படுமா
தேனி: மாவட்டத்தின் டூவீலர்களில் நம்பர் பிளேட்களில் பதிவு எண்ணிற்கு பதிலாக விரும்பிய பெயர்கள் எழுதி இயக்குவது அதிகரித்து வருகிறது.தேனி மற்றும் புற நகர் பகுதியில் டூவீலர்களில் நம்பர் பிளேட்டுகளில் எண்களுக்கு பதிலாக பலர் பெயர்கள் பொருத்தியும், நம்பர் பிளேட்கள் இன்றியும் இயக்குவது அதிகரித்து வருகிறது. இந்த டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பி, பிறரை அச்சுருத்தும் வகையில் இயக்குவது தொடர்கிறது. இவர்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். விதிமீறும் இவர்களை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களிடம் பிரச்னை செய்வது, பின் தொடர்ந்து சென்று பிரச்னை செய்கின்றனர். விதிமீறி டூவீலர் இயக்குபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.