உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்

கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்

கூடலுார்: கூடலுார் குமுளி நெடுஞ்சாலையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். குமுளி நோக்கி சென்ற டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது சாக்குப் பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் கூடலூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் 40, இவரது மனைவி அருணா 31, என தெரியவந்தது. விசாரணை செய்து கொண்டிருந்த போது முத்துப்பாண்டியன் தப்பி ஓடிவிட்டார். அருணாவை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முத்துப்பாண்டியனை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ