உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டிற்கு இலை பறித்த பெண் பாம்பு கடித்து பலி

ஆட்டிற்கு இலை பறித்த பெண் பாம்பு கடித்து பலி

சின்னமனூர் : நாராயணத்தேவன்பட்டி பழைய சுருளி ரோட்டில் வசித்து வருபவர் ஈஸ்வரன் 43, இவரது மனைவி அழகு நாச்சியார் 38 . இவர்களின் இரண்டு மகள்களில் ஒரு மகள் திருமணம் முடித்து ராசிங்காபுரத்தில் உள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக கணவன், மனைவியும் டூவீலரில் ராசிங்காபுரத்திற்கு சென்றனர். செல்லும் வழியில் மார்க்கையன்கோட்டை- குச்சனூர் இடையே டூ வீலரை நிறுத்தி விட்டு, தாங்கள் வளர்க்கும் ஆட்டிற்கு இலை தழைகளை பறித்துள்ளனர். அப்போது அழகு நாச்சியாரை பாம்பு கடித்தது. உடனே சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி