உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி 40, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி 37, என்பவருக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 15,10 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கணவர் கோபித்துக் கொண்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பாண்டீஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.நேற்று முன்தினம் பாண்டீஸ்வரியின் தாயார் வீரு சின்னம்மாள் மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளுடன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அக்கம் பக்கம் விசாரிக்கும் கண்டுபிடிக்க முடியாமல் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி