கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண் துாக்கிட்டு தற்கொலை
கடமலைக்குண்டு,:கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்களத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் மனைவி ராதா 30, மற்றும் குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையில் உள்ள கருப்பசுவாமி கோயிலுக்கு நவ. 19ல் வந்துள்ளார்.அன்று இரவு கோயில் வளாகத்தில் தங்கினர். காலையில் ராதாவை காணவில்லை. கடமலைக்குண்டு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று காலை கோயில் அருகே ஆத்துக்காடு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் ராதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்தார். கோயில் வளாகத்தில் தற்கொலைகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.