உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்களுக்கு கு.க., எளிது ஆண்களிடம் ஆர்வம் குறைவு

பெண்களுக்கு கு.க., எளிது ஆண்களிடம் ஆர்வம் குறைவு

கம்பம் : பெண்களுக்கான கு.க. ஆப்பரேஷன் எளிதானது,ஆண்களை பிடிப்பது சிரமம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு குடும்பநலத்துறை மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகிறது. முன்பு பெண்களுக்கு மட்டும் இருந்த அறுவை சிகிச்சை நாளடைவில் ஆண்களுக்கும் வாசக்டமி எனும் ஆப்பரேஷன் செய்கின்றனர். இதில் தழும்பிருக்காது, ஆப்பரேஷன் செய்தவுடன் வீட்டிற்கு சென்றுவிடலாம். தாம்பத்யத்தில் ஈடுபட தடையில்லை என பல சிறப்பம்சங்களை கொண்டது. ஆனாலும் ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.பெண்கள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளில் சேறும்போதே டாக்டர்கள் அவர்களிடம் விளக்கி கூறி, கருத்தடை எளிதாக செய்து விடுகின்றனர். பெண்களும் விரும்பி செய்து கொள்கின்றனர். ஆனால் ஆண்களை பிடிப்பது சிரமமாக உள்ளது.எனவே தற்போது ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க குடும்பநலத்துறை திட்டமிட்டுள்ளது. ஆண்கள் கருத்தடை செய்தால் ரூ.5 ஆயிரம் வரை கலெக்டர் ஊக்கத் தொகை வழங்கினார்கள். ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லாததும் ஒரு காரணம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை