உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  காட்டுப்பன்றி முட்டி தொழிலாளி பலி

 காட்டுப்பன்றி முட்டி தொழிலாளி பலி

பெரியகுளம்: பெரியகுளம் கல்லார்ரோடு சுக்காம்பாறை ஓடைவயல் பகுதியில் திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தக்குமாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு ராமசாமி 70. மனைவி விஜயலட்சுமி 65யுடன் தங்கி வேலை செய்தார். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுப்பன்றி ராமசாமியை முட்டியதில் பலத்த காயமடைந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ