டூவீலர் - பஸ் மோதல் தொழிலாளி பலி
போடி: தேனிமாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் 42. கூலித் தொழிலாளி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இரவு சில்லமரத்துப்பட்டியில் இருந்து போடிக்கு டூவீலரில் சென்றுள்ளார். தர்மத்துப்பட்டி அருகே பின்புறம் வேகமாக வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள், பொதுமக்கள் போடி --தேவாரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., சுனில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி கூறியபின் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.