உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆனயிரங்கல் அணையில் தோணி கவிழ்ந்து தொழிலாளி மாயம்

ஆனயிரங்கல் அணையில் தோணி கவிழ்ந்து தொழிலாளி மாயம்

மூணாறு; இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே ஆனயிரங்கல் அணை நீர்தேக்கத்தில் தோணி மூழ்கி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்தீப்சிங்ராம் 26, மாயமானார். அவர் உட்பட ஐந்து வெளி மாநில தொழிலாளர்கள் ஏலத் தோட்டத்தில் பணி முடிந்து நேற்று மாலை ஆனயிரங்கல் அணை நீர் தேக்கத்தில் தோணியில் மறு கரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. நீர் தேக்கத்தை பாதி கடந்த நிலையில் பலத்த காற்றில் தோணி நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு தொழிலாளர்கள், தோணி இயக்கியவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் சந்தீப்சிங்ராம் நீரில் மூழ்கி மாயமானார். அப்பகுதி மக்களும்,மூணாறு தீயணைப்பு துறையினரும் சந்தீப்சிங்ராமை தேடினர். மழை, இருள் சூழ துவங்கியதால் மாலை 6:00 மணியுடன் தேடுதல் பணியை நிறுத்தினர். தொடுபுழாவில் இருந்து 'ஸ்கூபா' குழு வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ