உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஓட்டு பதிவு இயந்திரத்தில் பீப் சப்தம் வரவில்லை என குழம்பிய தொழிலாளர்கள்

 ஓட்டு பதிவு இயந்திரத்தில் பீப் சப்தம் வரவில்லை என குழம்பிய தொழிலாளர்கள்

மூணாறு: ஓட்டு பதிவு இயந்திரத்தில் 'பீப்' சப்தம் வரவில்லை என கூறி தொழிலாளர்கள் குழப்பம் அடைந்தனர். மூணாறு ஊராட்சி தேயிலை தோட்ட பகுதிகளை கொண்டது. அங்கு வாக்காளர்கள் அனைவரும் தமிழர்கள். நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு பதிவின் போது இயந்திரத்தில் இருந்து ' பீப்' சப்தம் வரவில்லை என கூறி தொழிலாளர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு வாக்காளர் ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என மூன்று ஓட்டுகள் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஓட்டுச் சாவடிகளில் மூன்று ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. மூன்று இயந்திரங்களிலும் சின்னங்களில் பட்டன்கள் அழுத்திய பிறகு ' பீப்' சப்தம் கேட்டது. ஆனால் ஒவ்வொரு பட்டனை அழுத்திய பிறகு ' பீப்' சப்தம் வரும் என பெரும்பாலான வாக்காளர்கள் எண்ணியதால் தொழிலாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குழப்பம் ஏற்பட நேரிட்டது. அது குறித்து தெளிவு படுத்திய பிறகு தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர். அவதி: எஸ்டேட் பகுதிகளில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் போதிய அளவில் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் ஓட்டு பதிவு செய்ய சென்ற முதியவர்கள் உள்பட பலர் வெளிச்சம் இல்லாமல் அவதியுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை