உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கல்லுாரியில் பயிலரங்கம்

 கல்லுாரியில் பயிலரங்கம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். இப்பயிற்சி பட்டறையின் சிறப்பு கருத்தாளராக திருவள்ளுவர் பல்கலை. கழக ஆங்கில பேராசிரியர் கண்ணதாசன் பங்கேற்றார். கவிதை, வாசிப்பு , நவீன படைப்பாற்றலின் பயணம் , புதிய கவிதை ஓட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து பேசினார். பயிலரங்கில் துறை தலைவர் அகமது மீரான், உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முகமது சமீம், பேராசிரியை பாத்திமா நஸ்ரின் உள்டோர் பேசினார்கள். பயிலரங்கை பேராசிரியர்கள் முகமது ராவுத்தர், அபுபக்கர் சித்திக் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ