வேளாண் பொறியியல் துறையில் ரூ.3.3 கோடியில் ஒர்க் ஷாப்
தேனி:வேளாண் பொறியியல் துறை சார்பில் 15 இடங்களில் ரூ.3.30 கோடி மதிப்பில் ஒர்க் ஷாப் அமைக்கப்படுகிறது.வேளாண் பொறியியல் துறை சார்பில் உழவுக்கான டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது. இந்த கருவிகளை பழுது நீக்க , பிரதமர் தேசிய வேளாண் திட்டத்தில் இயந்திர கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மதுரை, தேனி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் 12 இடங்களில் உள்ளே வேளாண் விரிவாக்க மையங்களில் 100 ச.மீ., பரப்பில் இடம் ஒதுக்கீடு செய்ய வேளாண் தலைமைப்பொறியாளர் முருகேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாவட்டம் சேடபட்டி, மேலுார், தேனியில் சின்னமனுார், கம்பம் ஆகிய பகுதிகளில் ஒர்க்ஷாப்கள்அமைகின்றன.