மேலும் செய்திகள்
செவிலியர் தினவிழா கொண்டாட்டம்
13-May-2025
தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இம்மருத்துவமனையின்நர்சிங் கண்காணிப்பாளர் பிரிவு நுழைவு வாயிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தைஉதவிநிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். மாவட்ட இடையீட்டு மையம் வழியாக ரவுண்டானா, கல்லுாரி வளாகம் வழியாகநுழைவு வாயில் சென்று மீண்டும் கூட்டரங்கு அருகே நிறைவு பெற்றது. நர்சிங் கண்காணிப்பாளர்கள் மின்னல்கொடி, கயல்விழி, நாகேஸ்வரி ஆகியோர்முன்னிலை வகித்தனர். அதன் பின் கூட்டரங்கில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நர்ஸ் ஈஸ்வரி உலக செவிலியர் தின உறுதி மொழி வாசிக்க, அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்வில் நர்ஸ்கள், கல்லுாரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய உலக செவிலியர் தினத்தில் கண்காணிப்பாளர்பதவி உயர்வு பெற்ற சர்க்கரேஸ், வாசுகி ஆகிய இருவருக்கும், பெரியகுளம் மருத்துவமனையில் பணியாற்றி கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற லெனின் உட்பட மூவரை டாக்டர்கள், கண்காணிப்பாளர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
13-May-2025