உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி

கம்பம்: காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதை ஆயுஷ் அமைச்சகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது.காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் முருகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் பிரபு ராஜா, அன்பு நிதி, தினேஷ், நர்சுகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி ஆயுஷ் அமைச்சக போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம், ஆரம்ப சுகாதார நிலையத்தை பாராட்டி சான்றிதழ் அனுப்பியுள்ளது.யோகா பயிற்சி முகாமை நடத்திய சித்தா டாக்டர் சிராசுதின் கூறுகையில்,'பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமன், மாதாந்திர பூப்பு கோளாறுகள், கருப்பை தடிப்பு, சினைப்பை நீர்க் கட்டிகள், அதிக குருதிப்போக்கு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய், மார்பக, கருப்பை புற்று நோய்கள் அதிகம் பாதிக்கிறது. அத்துடன் ஹார்மோன் கோளாறுகளான தைராய்டு சுரப்பு நோய், பூப்பு சுழற்சி நின்ற பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறை போன்றவற்றை யோகா பயிற்சிகளால் குணப்படுத்த முடியும். மன அழுத்தத்தினால் உடலில் சுரக்கும் ஹார்மோன்களான 'கார் டிஸோல் அட்ரினலின்' சுரப்பை யோக பயிற்சிகள் கட்டுப்படுத்தும். நிகழ்ச்சியில் பெண்களுக்கு வஜ்ராசனம், மகராசனம், தடாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி