உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: மாவட்டத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அவில்தார் தகுதி வரையுள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களின் சிறார்கள் தொழிற்கல்வி படிப்புக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற www.ksb.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை பெற ஜெ.சி.ஓ., மற்றும் அதற்கு மேல் தகுதி உள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்த சிறார்கள் www.exwelthn.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பித்த ஆவணங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.