கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
போடி: காபித் தோட்ட தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் மகன், மகள்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் போடி காபி வாரிய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதனை பெற்று பயனடையலாம்.'' என, போடி காபி வாரிய துணை இயக்குனர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: காபி தோட்ட தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு காபி வாரியம் மூலம் கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு முடித்து நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், முதலாம் ஆண்டு தொழிற்கல்வி, இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்கள், மருத்துவம், மருந்தாளுநர், செவிலியர், பொறியியல், வேளாண், தொழில் நுட்பப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உடைய மாணவர்கள் காபி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் நவ.20க்குள் போடி காபி வாரிய விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.