உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோப்பு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கோப்பு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி:கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் காகித அட்டை உறை, கோப்பு தயாரித்தல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஜூன் 16 முதல் ஜூன் 28 வரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.இதில் கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்ப முள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகல் ஆகியவற்றுடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர்ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ