விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நீர்நிலைப்பாதுகாவலர் விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஜன.,17 க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த விருது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குநர் அலுவலகம் அல்லது 044 24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்