நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி : ''மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின்பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.'' என, வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது : பயிர் சாகுபடியில் ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து உயிரியல் சுழற்சி, இயற்கை, இயற்கை எரு பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்யும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பரிசு ரூ.2 லட்சம், பதக்கம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் செப்.15க்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என, தெரிவிக்கப்பட்டுள்ளது.