உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கலாம்

தேனி: தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊரக திறனறித்தேர்விற்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.ஆயிரம் உதவித்தொகையைாக வழங்கப்படும். இந்தாண்டிற்கான திறனறித்தேர்வு நவ., 21ல் நடக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் இன்று(அக்.,13) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை