மேலும் செய்திகள்
சின்னமனுாரில் நெல் அறுவடை துவக்கம்
17-Oct-2024
சின்னமனூர்: சின்னமனூர் பள்ளிக் கோட்டைபட்டி நடுத்தெருவில் வசிப்பவர் பசுபதி 40, இவருக்கு மாடசாமி 25 என்ற மகனும், ஷாலினி 23, என்ற மகளும் உள்ளனர். மகன் மாடசாமி மதுபழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்வது வழக்கம். ஏற்கெனவே இரு முறை மதுபோதையில் தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த மாடசாமியை தந்தை கண்டித்தார். இதனால் உறவினர் முருகேஸ்வரி வீட்டிற்கு மாடசாமி சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வீட்டிற்குள் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Oct-2024