ஜோரா வெள்ளி ஷோரூம் திறப்பு விழா
தேனி: தேனி பாலசங்கா குழுமத்தின் அக்ஷயா வெள்ளி நிறுவனத்தின் புதிய வெள்ளி ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களுக்கான ஜோரா ஷோரூமை கே.எம்.சி., குழும நிறுவனர் முத்துக்கோவிந்தன் திறந்து வைத்தார். தேனியில் முதன்முறையாக உயர்தர வெள்ளி நகைகள் தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளிப் பொருட்கள், குழந்தைகளுக்கான வெள்ளி தொட்டில்கள், அலங்கார சேர்கள், வெள்ளிப் பாத்திரங்களுக்கான பிரத்யேக, பிரம்மாண்டமான ஷோரூமில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என இயக்குனர் செந்தில்நாராயணன் தெரிவித்தார். வர்த்தக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.