உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / விவசாய ஆசிரியர் நியமனத்தடையை நீக்கதொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

விவசாய ஆசிரியர் நியமனத்தடையை நீக்கதொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி:விவசாயம், நெசவு, மரவேலை ஆசிரியர் நியமனத்தடையை நீக்க தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியது.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கலந்தாய்வுக்கூட்டம் பாளை. யில் கவுரவத்தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. ராஜேந்திரன், சிதம்பரம் முன்னிலை வகித்தனர். ஸ்டீபன், மகேஸ்வரி, ராமலட்சுமி, உமா பேசினர்.விவசாயம், நெசவு, மரவேலை ஆசிரியர் நியமனத்தடையை நீக்கி நியமனம் வழங்குவது, ஓவியம், தையல், இசை ஆசிரியர்களை அதிக அளவில் நியமிப்பது, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் காலியிடங்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய பணியிடம் ஏற்படுத்தி நியமனம் செய்வது, நடுநிலைப்பள்ளிகளில் ஓவியம், இசை பாட ஆசிரியர்களை நியமிப்பது, அனைத்து பாடங்களுக்கும் டி.டி.சி., பயிற்சி நடத்தி எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர்களுக்கு பயிற்சி அளிப்பது, மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் தொழிலை முறையாக கற்பிக்க தொழில் ஆசிரியர்களை நியமிப்பது, சிறுவர், சிறுமிகளிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு வளர கலைத்தொழில் பாடங்களை பள்ளிகளில் முறையாக கற்பிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி