உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பஞ்., செயலர் இடமாற்றம் கண்டித்த 400 ஊழியர் கைது

பஞ்., செயலர் இடமாற்றம் கண்டித்த 400 ஊழியர் கைது

திருநெல்வேலி:முத்துக்குட்டி என்பவர், ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட தலைவராக உள்ளார். ஊராட்சி செயலர்களை வேறு ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, ஏற்கனவே சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முத்துக்குட்டி தலைமை வகித்தார். இதனால் அவர் மானுார் ஒன்றியத்துக்கு சமீபத்தில் இடம் மாற்றப்பட்டார்.அவரை இடமாற்றம் செய்த கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் அனிதாவை கண்டித்து, ஒன்றிய அலுவலகம் முன் நேற்று பல மாவட்டங்களை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீசார் அவர்களை கைது செய்து, மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடந்த போதும் கைதானவர்களை விடுவிப்பது குறித்து நேற்று மாலை வரை, எந்த முடிவும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை