மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வள்ளியூர்:வள்ளியூர் அருகே மருத்துவமனையில், 5 லட்சம் ரூபாய் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில், டாக்டர் ஆன்றோ ரொமைன் தாஸ் மருத்துவமனை நடத்துகிறார். கடந்த மாதம் 25-ம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரு அருகேயுள்ள சான்சத்திர ஹள்ளி பாரத் நகரைச் சேர்ந்த ஜீவன்லால், 57, என்பவர் சிகிச்சைக்காக இங்கு வந்தார். சிகிச்சை முடிந்து கிளம்பும்போது, டாக்டர் அறையில் இருந்த 5 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து கொண்டு சென்றார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மைசூர் அருகே பிருந்தாவனத்தில் பதுங்கியிருந்த ஜீவன்லாலை கைது செய்து, 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.
29-Sep-2025
25-Sep-2025