உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.

மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.

திருநெல்வேலி:நள்ளிரவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை நான்கு மணி நேரம் அவரது வீட்டில் காத்திருந்து கைது செய்தார் நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்ன குமார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வெங்கட்ராயபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது. தகவல் அறிந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் போலீஸ் படையினருடன் அங்கு சென்றார்.அந்த கும்பல் போலீசை கண்டதும் மணல் அள்ளும் இயந்திரம், டூவீலர்களை விட்டுவிட்டு தப்பி சென்றது. கும்பல் தலைவன் கங்கை ஆதித்தன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. நள்ளிரவில் சாத்தான்குளத்தில் உள்ள கங்கைஆதித்தன் வீட்டிற்கு ஏ.எஸ்.பி., சென்றார். ஆனால் அவரை வீட்டிற்குள் வைத்துக்கொடு கதவை பூட்டிக்கொண்டனர். அவரது குடும்பத்தினரோ, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களோ அவரை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. மேலும் கொலையா செய்து விட்டார், மணல் கடத்தலுக்கு நள்ளிரவில் கைது செய்வீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும் இரவில் நான்கு மணி நேரமாக காத்திருந்து போலீசார் கங்கை ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sridhar
செப் 03, 2024 03:15

Sathankulam is famous for sand and conversion mafia. Even the police in jail are a victim of this


Kalyanaraman
செப் 02, 2024 09:15

ஒரு ஊரே இயற்கை வளம் அழிவது தவறு இல்லை என்ற அறியாமையில் உள்ளது இங்கு தெரிகிறது. இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை. இயற்கை வளங்கள் அழிந்து போனால் மனித குலத்துக்கு, அந்தந்த ஊருக்கு எப்படிப்பட்ட ஆபத்து என்பதை தெளிவுபடுத்தினால் இதுபோல இது போன்ற மணல் திருடர்களுக்கு உடந்தையாக இருப்பது குறையும்.


Gurumurthy Kalyanaraman
செப் 01, 2024 21:32

சாம்பிளுக்கு ஒருத்தனை கைது செய்து விட்டு, மணல் திருடே நடக்கவில்லை. திருடியவரகளையெல்லாம் கைது செய்து விட்டோம் என்று பிரகடன படுத்தி விடலாம். சபாஷ்


N Annamalai
செப் 01, 2024 10:05

பாராட்டுகள் .இன்னும் சிறப்பாக உயர் நிலைக்கு வர வாழ்த்துக்கள்


nagendhiran
ஆக 31, 2024 14:07

இதுவே சாமானியனாக இருந்திருந்தால் கழுத்தில் விட்டு தூக்கியிருப்பானுக்கு? விடியல் திமுக காரனாக இருந்தால் நான்கு மணி நேரம்தான் ஆகும்?


KRISHNAN R
ஆக 31, 2024 10:29

எல்லாம் கொடுமை


krishnamurthy
ஆக 31, 2024 09:07

சபாஷ் ஏஎஸ்பி


Almighty
ஆக 31, 2024 06:47

இது போன்ற கனிம வள கற்பழிப்பு திருடர்களை ரோட்டில் ஓட ஓட அடித்தால் தான் பயம் வரும். பெயில் வாங்கி வந்து மீண்டும் தொழில் செய்வார்கள். நமது சட்டத்தின் லட்சணம் இது. இவர்கள் குடும்ப சொத்து பறிமுதல் சட்டம் கொண்டு வாங்க...அரசு உதவிகளை வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கே நிறுத்துங்க. அந்த பெண் போடும் கூப்பாடு கடத்தியவர் விட அதிகம் நடவடிக்கை எடுக்க தகுந்தது.


Mani . V
ஆக 31, 2024 04:30

மாமூல் விவகாரம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை