மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் மார்ச் மாதம் பினாயில் வாங்கியதாக ரூ. 55 லட்சத்திற்கு பில் வந்தது. ஜனவரி முதல் மார்ச் வரை விடுமுறையில் இருந்த மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, ஏப்ரலில் மீண்டும் பொறுப்பேற்ற போது இவ்வளவு அதிக தொகைக்கு பினாயில் வாங்கப்பட்டுள்ளதா என சந்தேகமடைந்தார்.பில்லுக்கு அனுமதி மறுத்தார். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரேவிடம் புகார் தெரிவித்தார்.மாநகர நல அலுவலரின் விடுமுறை காலத்தில் இந்த மோசடிக்கு துணை போன அதிகாரிகள் குறித்து கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.சென்னையில் உள்ள நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பினாயில் பில் மற்றும் ஆவணங்களை சென்னைக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.எனவே ரூ. 55 லட்சம் பினாயில் விவகாரத்தில் துரித விசாரணை நடத்தினால் உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வரை சிக்குவார்கள் என தெரிகிறது.
29-Sep-2025
25-Sep-2025