மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
சேரன்மகாதேவி:சேரன்மகாதேவி அருகே 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.சேரன்மகாதேவி அருகே யுள்ள பூதத்தான்குடியிருப்பு கிராமத்தில் திருச்செந்தூர் சிவபாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு சிவ பாலமுருகருக்கும் மூலவர் பால முருகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது.மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.நிகழ்ச்சிகள் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், சென்னை சிவகுருநாத சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை திருச்செந்தூர் சிவ பாலமுருகன் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.பூதத்தான்குடியிருப்பு 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
29-Sep-2025
25-Sep-2025