மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
களக்காடு:திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், 21. வள்ளியூர் பழவூரைச் சேர்ந்தவர் மதுமிதா, 19. இருவரும் வள்ளியூரில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தனர். இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி டூ - வீலரில் ஜாலியாக வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.வழக்கம்போல, நேற்று இருவரும் நாங்குநேரி அருகே நம்பி நகர் பகுதியில், கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில், எதிரே வாகனங்கள் வரும் ஒன்வே ரோட்டில் சென்றனர். மதியம், 1:30 மணிக்கு கேரள மாநிலம், ஆலுவாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி, துாத்துக்குடிக்குச் சென்ற லாரி, இவர்களின் டூ - வீலர் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரி டிரைவர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சேர்மன், 37, கைது செய்யப்பட்டார்.
29-Sep-2025
25-Sep-2025