உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாஞ்சோலை தொழிலாளர் பிரச்னை: விசாரிக்க குழு அமைப்பு

மாஞ்சோலை தொழிலாளர் பிரச்னை: விசாரிக்க குழு அமைப்பு

திருநெல்வேலி,:மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமை விசாரணை ஆணையர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. பி.பி.டி.சி., நிறுவனத்தின் குத்தகைக்காலம் நிறைவு பெறுவதால் அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். 90 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றியவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து திருநெல்வேலி சமூக நல ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். தேசிய மனித உரிமை ஆணையம் இந்த பிரச்னையை கலெக்டர் விசாரித்து தீர்த்து வைப்பார் என அறிவித்தது. எஸ்.பி.முத்துராமன் மேலும் ஒரு புதிய மனு அளித்தார். அதில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்னையில் எதிர்மனுதாரராக உள்ள கலெக்டர் இதில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை எனவே தேசிய மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு பிறப்பிக்க கேட்டுக் கொண்டார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மனு

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆக.,20 டில்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் விஜயா பாரதி சயானியை சந்தித்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த கோரிக்கை வைத்தார். அவருடைய மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், ஆணையத்தின் தலைமை விசாரணை ஆணையர் தலைமையில் ஒரு குழுவினர் மாஞ்சோலையில் விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை