முதியவர் தீக்குளிப்பு
திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் ஆர்ச் அருகே, தனியார் கட்டுமான நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருபவர் ராஜா 72. நேற்று மாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீ பற்றி எரிந்த நிலையில் சாலையில் ஓடி வந்தார். அவரை பொதுமக்கள் தடுத்து, தீயை அணைத்தனர். போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். போலீசார் விசாரித்தனர்.