மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஜாதி ரீதியான கொலைகள் தொடர்கின்றன.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளன. இதில் 16 கொலைகள் ஜாதி ரீதியானவை என அரசு தெரிவித்துள்ளது.தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு போலீசார் கொலைக் குற்றவாளிகளை தேடியே வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.திருநெல்வேலியில் கடந்த 4 சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் சரமாரியாக வெட்டப்பட்டார்.கடந்த 17ம் தேதி சாந்தி நகரில் தொழிலாளி இசக்கிமுத்துவை மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.அதேபோல, 20ம் தேதி தீபக் ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சமீப காலமாக லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கூலிக்கு கொலை செய்யும் கும்பலின் அட்டூழியம் தென் மாவட்டங்களில் அதிரிகரித்து வருகிறது.இதைக் கட்டுப்படுத்த போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தீபக் ராஜா கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய ஒரு வாரம் ஆனது. நேற்று முன் தினம் இறுதி ஊர்வலத்தில் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் என 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர். அவர்கள், எஸ்.பி., சிலம்பரசனுடன் வாக்குவாதம் செய்தனர்.தென் மாவட்டங்களில் மீண்டும் ஜாதி மோதல்கள், கூலிப்படையினரின் அட்டூழியத்தை ஒடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் அதிகரித்துள்ளது.
29-Sep-2025
25-Sep-2025