உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கெட்டுப்போன ரொட்டிக்கு ரூ.20,000 இழப்பீடு

கெட்டுப்போன ரொட்டிக்கு ரூ.20,000 இழப்பீடு

திருநெல்வேலி ; திருநெல்வேலி, மகாராஜநகரை சேர்ந்த வழக்கறிஞர் சங்கரசுப்ரமணியன், 29, கடந்த 2023 ஜூன் 10ல், நியூ அரசன் சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு கோதுமை ரொட்டிகள், தலா 33 ரூபாய் வீதம், 66 ரூபாய் கொடுத்து வாங்கினார். ஆனால், அடுத்த நாளே அவை முற்றிலும் கெட்டுப்போயிருந்ததை அறிந்தார்.வாங்கிய கடைக்கு சென்று பணத்தை திரும்ப கேட்டார். கடைக்காரர், 'வேறு ரொட்டி மாற்றிக் கொடுக்கலாம்; பணத்தை வழங்க முடியாது' என மறுத்ததால், அவர் திருநெல்வேலி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரம்மா ஆஜரானார்.நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வழக்கை விசாரித்து, நுகர்வோரின் மன உளைச்சலுக்காக, 10,000 ரூபாய், வழக்கு செலவுக்கு, 10,000 ரூபாய் என, 20,000 ரூபாய் வழங்குமாறு நியூ அரசன் சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரட் தயாரித்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை