மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் பாணான்குளம் அருகே மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக சென்ற ஜீப்பை சோதனையிட்ட போது ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள். காரில் இருந்த சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் 42, விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த சீமைச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டிஎன் 39 சி.எப். 5054 என்ற போலி எண் கொண்ட ஜீப், 8 அலைபேசிகள், ஒரு அரிவாள், கத்தி, பயன்பாட்டில் உள்ள கரன்சி நோட்டுகள் ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பலின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025