உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக தீயணைப்பு வீரர்

தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக தீயணைப்பு வீரர்

திருநெல்வேலி:சர்வதேச அளவில் தீயணைப்பு படை வீரர்களுக்கான தடகளப் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்தது. இதில் இந்திய அணியில் டில்லி தீயணைப்பு படையிலிருந்து ஐந்து பேரும், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தலா ஒரு வீரரும் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ஒரே ஒரு வீரராக திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் தேர்வானார். இவர், 7 மாதமாக சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார். டென்மார்க் போட்டிகளில் 200 மீட்டர் 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று நான்கிலும்தங்கப்பதக்கங்கள் வென்றார். இவரை தீயணைப்பு துறையினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishnamurthy Venkatesan
செப் 12, 2024 11:26

தமிழக அரசு, குறிப்பாக விளையாட்டு துறை அமைச்சர் இவரை பதவி உயர்வு, cash awards கௌரவ படுத்த வேண்டும்.


முக்கிய வீடியோ