உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணியில் சாக்கடை நீர் முகம் சுளிக்கும் நெல்லை மக்கள்

தாமிரபரணியில் சாக்கடை நீர் முகம் சுளிக்கும் நெல்லை மக்கள்

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் துவங்கி திருநெல்வேலி வழியாக பாயும் தாமிரபரணி ஆற்றில், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மட்டும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சியின் சாக்கடை நீர் கலக்கிறது. குறிப்பாக, சிந்துபூந்துறை, கருப்பந்துறை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் வாயிலாக சாக்கடை நீர் தாமிரபரணியில் கலக்கிறது.மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாயில் குறுக்கே பைபாஸ் சாலை பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், அக்கால்வாயில் விட வேண்டிய தண்ணீரை பொதுப்பணித்துறையினர் தாமிரபரணி ஆற்றில் திருப்பி விட்டுள்ளனர். இதனால், பாளையங்கால்வாய் முழுதும் தற்போது சாக்கடையாக மாறிவிட்டது. சாக்கடை நீர் சிற்றாறு போல தாமிரபரணியில் கருப்பந்துறை பகுதியில் நேற்று கலந்தது.பொதுமக்கள் குளிக்கும் இடம், குடிநீருக்கான பம்பிங் ஸ்டேஷன் பகுதியில், சாக்கடை நீர் கலந்தது பொதுமக்களை முகம் சுளிக்க செய்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் தாக்கரே ஈரோடுக்கு இடமாறுதல் அறிவிப்பு வந்ததால் இந்த இடத்தை பார்வையிடவில்லை.இன்று ஆடி மாதம் துவங்கும் நிலையில், ஆடி அமாவாசை மற்றும் பல்வேறு கோவில் ஆன்மிக நிகழ்வுகளுக்கு, தாமிரபரணி ஆற்று நீரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது சாக்கடை கலந்து செல்லும் தாமிரபரணியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நாகராஜ் ரா
ஜூலை 17, 2024 23:38

இப்போது எங்கே சென்றார்கள் தாமிரபரணி மீட்பு குழு உறுப்பினர்கள். இந்த அவலத்தைவிடவா நாங்கள் மாஞ்சோலையில் நாங்கள் நீருக்கு கேடு விளைவித்து விட்டோம். இப்போது வாருங்கள் தாமிரபரணியை மீட்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை