உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது

பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது

திருநெல்வேலி:இரண்டு ஏக்கர் நிலத்தை தனக்கு தராத பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலியை அடுத்த திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த சுடலை மனைவி முப்பிடாதி 55. சுடலை காலமாகிவிட்டார்.அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ளது. அதனை தனக்கு தருமாறு சுடலையின் தம்பி மகன் பாலமுருகன் 24, கேட்டார். இதற்கு முப்பிடாதி சம்மதிக்கவில்லை. ஜூன் 10ல் திருவேங்கடநாதபுரத்தில் வைத்து சொத்து பிரச்னையில் பெரியம்மா முப்பிடாதியை உலக்கையால் அடித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முப்பிடாதி நேற்று இறந்தார். பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ